/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை தாக்கி வழிப்பறி முயற்சி: இருவருக்கு 'காப்பு'
/
பெண்ணை தாக்கி வழிப்பறி முயற்சி: இருவருக்கு 'காப்பு'
பெண்ணை தாக்கி வழிப்பறி முயற்சி: இருவருக்கு 'காப்பு'
பெண்ணை தாக்கி வழிப்பறி முயற்சி: இருவருக்கு 'காப்பு'
ADDED : ஜன 12, 2026 05:16 AM

சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில், நண்பருடன் நடந்து சென்ற பெண்ணை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே புரசைவாக்கத்தைச் சேர்ந்த 31 வயது பெண், தன் நண்பருடன் கடந்த மாதம் 31ம் தேதி நடந்து சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த இருவர், அப்பெண்ணை தாக்கி, கைப்பையை பறிக்க முயன்றனர். தடுக்க முயன்ற, அவரது நண்பரையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து விசாரித்த ஆயிரம் விளக்கு போலீசார், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜெயகுமார், 30 மற்றும் அவரது கூட்டாளியான முகமது பரூக், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.