ADDED : நவ 13, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 63. இவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நுங்கம்பாக்கம் மேற்கு மாட வீதியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மதுரை சென்ற நிலையில், நேற்று வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தன. இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.