/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தையில் கடைகளை ஒதுக்க ஏலம்
/
கோயம்பேடு சந்தையில் கடைகளை ஒதுக்க ஏலம்
ADDED : செப் 26, 2025 12:55 AM
சென்னை : கோயம்பேடு காய், கனி மொத்த விற்பனை சந்தை வளாகத்தில், காலியாக உள்ள 37 கடைகள், பொது ஏல முறையில் ஒதுக்கப்பட உள்ளன.
கோயம்பேடில், 1996ம் ஆண்டு, 295 ஏக்கர் நிலத்தில், 3,000 கடைகள் கட்டப்பட்டன. இவை, காய், கனி, மலர், உணவு தானிய மொத்த விற்பனை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது.
இதில் பெரும்பாலான கடைகள், கிரையம் முறையில் தரப்பட்டுள்ளன. இவற்றை, சி.எம்.டி.ஏ., எனும் பெருநகர வளர்ச்சி குழுமம் பராமரிக்கிறது.
இந்த வளாகத்தில், தற்போதைய நிலவரப்படி காய்கறிக்கு 14, கனி அங்காடிக்கு மூன்று; மலர் விற்பனைக்காக ஒரு கடை, உணவு தானியங்கள் விற்பனைக்கு 19 கடைகள் என மொத்தம், 37 கடைகள் காலியாக உள்ளன.
பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த கடைகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வழக்குகள் முடிக்கப்பட்ட நிலையில், கடைகளை பொது ஏலம் முறையில் ஒதுக்குவதற்கான அறிவிப்பை சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.
இதில் கடைகளை ஏலத்தில் எடுக்க விரும்புவோர், 'டெண்டர்' விதிகளுக்கு உட்பட்டு, நவ., 5க்குள் விண்ணப்பிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.