/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தியேட்டரில் சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'ஆடியன்ஸ்' தர்ம அடி
/
தியேட்டரில் சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'ஆடியன்ஸ்' தர்ம அடி
தியேட்டரில் சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'ஆடியன்ஸ்' தர்ம அடி
தியேட்டரில் சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 'ஆடியன்ஸ்' தர்ம அடி
ADDED : நவ 25, 2024 03:44 AM
சென்னை,:திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தாயுடன் வசிக்கிறார்.
சிறுமியின் தாய் ராயப்பேட்டை ஆயில் மங்கர் தெருவைச் சேர்ந்த சுரேஷ், 29, என்பவரிடம், கடனாக, 50,000 ரூபாய் கேட்டுள்ளார்.
பி.காம்., படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுரேஷ், நேற்று முன்தினம் மாலை, மது போதையில் சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார்.
சிறுமியின் தாயிடம், 'செருப்பு இல்லாமல் மகளை ஏன் பள்ளிக்கு அனுப்புகிறாய்' என கேட்டுள்ளார். பின், 200 ரூபாய் கொடுத்து சிறுமிக்கு சாப்பாடு வாங்கித்தர சொல்லியுள்ளார்.
அந்த ரூபாயில் உணவு வாங்கி வந்து, தாயும் மகளும் சாப்பிட்டுள்ளனர். பின், சிறுமிக்கு செருப்பு வாங்கி தருவதாகக் கூறி, தன் இருசக்கர வாகனத்தில், சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், கடைக்கு செல்லாமல், ராயப்பேட்டை பகுதியில் ஒரு தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளார். படம் முடிந்து செல்லும்போது, செருப்பு வாங்கி தருவதாகக் கூறி, சிறுமியை சமாதானப்படுத்தி உள்ளார்.
தியேட்டரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது பிடியில் இருந்து தப்பிக்க, சிறுமி கூச்சலிட, படம் பார்க்க வந்தவர்கள், சுரேசை தாக்கி, ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க வேண்டும் என திட்டம் போட்டு, தியேட்டருக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.