/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ, பைக் தீ வைத்து எரிப்பு: இருவருக்கு வலை
/
ஆட்டோ, பைக் தீ வைத்து எரிப்பு: இருவருக்கு வலை
ADDED : ஜன 28, 2026 05:18 AM
மவுலிவாக்கம்: ஆட்டோ மற்றும் பைக்கை தீ வைத்து எரித்த நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர் அருகே முகலிவாக்கம், எஸ்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ், 25; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் வீட்டின் வெளியே நண்பர் பாலா, 28, என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, 'பாலாவின் நடவடிக்கை சரியில்லை; அவனுடன் ஏன் பழகுகிறாய்' என, முத்துராஜை அவரது தாய் கண்டித்துள்ளார். இதற்கு பாலா, முத்துராஜின் தாயை தரக்குறைவாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த முத்துராஜ், பாலாவை அடித்து உதைத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முத்துராஜின் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது ஆட்டோ மற்றும் 'பஜாஜ் பல்சர்' பைக், நள்ளிரவு தீப்பற்றி எரிந்தது.
விசாரணையில், அங்கு கூட்டாளியை அழைத்து வந்த பாலா, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, தப்பி சென்றது தெரிய வந்தது. இதில், ஆட்டோ மற்றும் பைக் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து விசாரித்த மவுலிவாக்கம் போலீசார், பாலா மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

