/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பால்கனி இடிந்து விழுந்து உருக்குலைந்த ஆட்டோ
/
பால்கனி இடிந்து விழுந்து உருக்குலைந்த ஆட்டோ
ADDED : டிச 04, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர்,-
பெரம்பூர், லட்சுமி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் முகமது அலி ஷகில், 34; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், தீட்டித்தோட்டம் பகுதிக்கு பயணி ஒருவரை இறக்கி விட வந்துள்ளார்.
அப்போது தீட்டித்தோட்டம் 7வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி, சற்று தொலைவில் மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அந்நேரம் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்த வீட்டின் முதல் மற்றும் 2வது மாடி பால்கனி இடிந்து, ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ நசுங்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.