sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மாணவிக்கு வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் கைது

/

 மாணவிக்கு வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் கைது

 மாணவிக்கு வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் கைது

 மாணவிக்கு வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் கைது


ADDED : ஜன 13, 2026 05:30 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: ஓடும் ஆட்டோவில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கீழே தள்ளி விட்டுச் சென்ற ஆட் டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை, திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்து, பள்ளி செல்வதற்காக ஆட்டோவில் ஏறினார்.

அப்போது, ஆட்டோ ஓட்டுநர் முன் இருக்கையில் அமர்ந்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். மாணவியும் முன் இருக்கையில், ஓட்டுநர் அருகிலேயே அமர்ந்து பயணித்துள்ளார். சி றிது துாரம் சென்றதும், ஓட்டுநர், மாணவியிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

மாணவி இறங்க முயற்சித்து கூச்சலிட்டுள்ளார். பயந்து போன ஓட்டுநர், மாணவியை கீழே தள்ளி ஆட்டோவில் வேகமாக சென்று விட்டார். இதில், மாணவிக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்ததில் மணலி அடுத்த மாத்துாரைச் சேர்ந்த சண்முகம், 56 என்பவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்றிரவு அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us