தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சவாரி வந்த தொழிலாளர்களை மிரட்டி ரூ.4,000 பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது

 சவாரி வந்த தொழிலாளர்களை மிரட்டி ரூ.4,000 பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது

 சவாரி வந்த தொழிலாளர்களை மிரட்டி ரூ.4,000 பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது


ADDED : மார் 24, 2026 09:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 09:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.சி.எப்.: சவாரி வந்த தொழிலாளர்களை மிரட்டி, பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் காடாதார் சமன்டா, 37; மெட்ரோ ரயில் ஒப்பந்த பணியாளர். இவர், கடந்த 22ம் தேதி சக ஊழியர்கள் நான்கு பேருடன், கொளத்துாரில் இருந்து உயர் நீதிமன்ற மெட்ரோ பணியிடத்திற்கு, 500 ரூபாய் தருவதாகக் கூறி ஆட்டோவில் ஏறியுள்ளார்.

பெரம்பூர், ராஜிவ் காந்தி நகர் அருகே சென்றபோது, திடீரென ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர், நான்கு பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து 4,000 ரூபாய் தரும்படி வற்புறுத்தினார்.

இதனால் அச்சமடைந்த காடாதார், பணப்பரிமாற்ற மொபைல் போன் செயலியான 'ஜிபே' மூலம், 4,000 ரூபாய் அனுப்பினார். பின், ஐந்து பேரையும், உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையம் அருகில் இறக்கிவிட்டு, ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து சென்றார்.

இது குறித்த புகாரையடுத்து ஐ.சி.எப்., போலீசார் விசாரித்தனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த நிஷாமுதீன், 41, என்பது தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us