UPDATED : அக் 29, 2026 10:59 PM
ADDED : அக் 29, 2026 10:55 PM
வியாசர்பாடி: மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கிய விமல்ராஜ், 31, என்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சென்றம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கதிரேசன், 31. வியாசர்பாடி பேருந்து பணிமனையில் ஓட்டுநராக உள்ளார்.
கடந்த 7ம் தேதி மாலை, வள்ளலார் நகர் பேருந்து பணிமனையில் இருந்து செங்குன்றம் செல்லும், தடம் எண்: 57 மாநகர பேருந்தை ஓட்டி வந்தார். பேருந்தில் நடத்துநர் சங்கீதா பணியில் இருந்தார். பேருந்து மூலக்கொத்தளம் வந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கும் கதிரேசனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து பேருந்து வியாசர்பாடி மார்க்கெட் அருகே வந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் பேருந்து ஓட்டுநரான கதிரேசனை கையால் தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறிய பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னே சென்ற தடம் எண்: 64சி பேருந்து மீது மோதி நின்றது. இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், ஆட்டோ ஓட்டுநர் வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த விமல்ராஜ், 31 என்பது தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
