ADDED : டிச 15, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், செம்பியத்தைச் சேர்ந்த பெண், கணவர் விவாகரத்து பெற்றநிலையில், தன் 17 வயது மகளுடன் தனியே வசித்து வந்தார். இதையடுத்து, வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக வீட்டில் இருந்த 17 வயது மகளுக்கு, அப்பெண்ணின் 2வது கணவரான ஆட்டோ ஓட்டுநர், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து, 'குழந்தைகள் ஹெல்ப்லைன் - 1098' என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார்.விசாரித்த, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் போலீசார் விசாரித்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.