/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
104 சவரன் கொள்ளை ஆட்டோ ஓட்டுநர் சிக்கினார்
/
104 சவரன் கொள்ளை ஆட்டோ ஓட்டுநர் சிக்கினார்
ADDED : ஜூலை 01, 2025 12:23 AM

பெரும்பாக்கம்வேளச்சேரி அடுத்த சித்தாலப்பாக்கம், வினோபா நகரை சேர்ந்தவர் மாலினி, 56. கடந்த 9ம் தேதி அதேபகுதியில் குடியிருக்கும் இரண்டாவது மகளின் வீட்டிற்கு சென்றார்.
கடந்த 28ம் தேதி, மாலினி குடியிருக்கும் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பீரோவில் இருந்த 104 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து, பெரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
இதில், சித்தாலப்பாக்கம், கன்னிக்கோவில் தெருவைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியராஜ் என்ற நாயுடு, 45, கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்தவர், நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, பொருட்களை மீட்டனர். அவர் மீது, 2022ம் ஆண்டு கஞ்சா விற்ற வழக்கு ஒன்று உள்ளது.