மழைநீர் கால்வாயில் விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
மழைநீர் கால்வாயில் விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
UPDATED : செப் 18, 2026 10:07 PM
ADDED : செப் 18, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
அயப்பாக்கம் :
மதுபோதையில் நடந்து சென்ற, 36 வயது ஆட்டோ ஓட்டுநர், திறந்த நிலையில் இருந்த மழை நீர் வடிகாலில் தலைக்குப்புற விழுந்து உயிரிழந்தார்.
அம்பத்துார் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணி, 36, ஆட்டோ ஓட்டுநர். மதுபோதைக்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் தன் நண்பருடன் மது அருந்தி விட்டு போதையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது திறந்த நிலையில் இருந்த, கழிவு நீர் தேங்கிய மழை நீர் வடிகாலில் தலைக்குப்புற விழுந்துள்ளார். இதில் அவர் மூச்சு திணறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கிருந்தோர் கொடுத்த தகவலின்படி, வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கால்வாயில் கிடந்த மணியின் உடலை மீட்டனர். அயப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
