தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தென்னை மரம் விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

தென்னை மரம் விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

தென்னை மரம் விழுந்து ஆட்டோ டிரைவர் பலி


ADDED : ஜூன் 21, 2025 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 12:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.கே.பி.நகர், வானகரம், ஓடைமா நகர், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 48; ஆட்டோ ஓட்டுனர்.

இவர், நேற்று இரவு சவாரி சென்று விட்டு, எம்.கே.பி.நகர், சென்ட்ரல் அவென்யூ சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் முன் நின்ற தென்னை மரம், திடீரென சாய்ந்து, ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோ நசுங்கி நிலையில், ஜெகதீசன் படுகாயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு இரவு உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய எம்.கே.பி., நகர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us