/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சவாரி செல்வதில் தகராறு ஆட்டோ ஓட்டுநர் கொலை
/
சவாரி செல்வதில் தகராறு ஆட்டோ ஓட்டுநர் கொலை
ADDED : ஜன 04, 2025 12:36 AM
திருமங்கலம்,  திருமங்கலம், எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்தோர் முனியப்பன், 50, செல்வம், 50.  ஆட்டோ ஓட்டுநர்களானஇருவரும், அண்ணா நகர் 11வது பிரதான சாலையில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து சவாரி செல்வது வழக்கம்.
நேற்று மாலை, வரிசைப்படி சவாரிக்காக செல்வம் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பயணியை, முனியப்பன் சவாரிக்காக ஏற்றிச் சென்றதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், சவாரி முடிந்து திரும்பி வந்த முனியப்பனிடம், இதுகுறித்து கேட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. செல்வம், கீழே கிடந்த சிறிய மரக்கட்டையை எடுத்து, முனியப்பனின் வலது காதில் அடித்துள்ளார். இதனால், நிலைகுலைந்த முனியப்பன், அதே இடத்திலேயே மயங்கினார்.
சக ஓட்டுநர்கள் அவரை மீட்டு, அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே முனியப்பன் இறந்ததாக கூறினர்.
திருமங்கலம் போலீசார், செல்வத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.

