/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண் தவறவிட்ட நகைகள் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் அம்பத்துாரில் நெகிழ்ச்சி
/
இளம்பெண் தவறவிட்ட நகைகள் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் அம்பத்துாரில் நெகிழ்ச்சி
இளம்பெண் தவறவிட்ட நகைகள் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் அம்பத்துாரில் நெகிழ்ச்சி
இளம்பெண் தவறவிட்ட நகைகள் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் அம்பத்துாரில் நெகிழ்ச்சி
ADDED : ஜன 28, 2026 05:52 AM

அம்பத்துார்: அம்பத்துார், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம், 66; ஆட்டோ ஓட்டுநர். இவர், அம்பத்துார், ஓ.டி., பேருந்து நிலையம் அருகே, இளம்பெண் ஒருவரை நேற்று முன்தினம் தன் ஆட்டோவில் ஏற்றி, திருமுல்லைவாயல் அருகே இறக்கி விட்டார்.
பின், அங்கிருந்து மற்றோரு பெண்ணை ஏற்றி, ஆவடியில் இறக்கி விட்டுள்ளார். அப்போது, ஆட்டோவில் 'ஹேண்ட் பேக்' ஒன்று இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, தங்க செயின், இரண்டு ஜோடி தங்க கம்மல், வெள்ளி கொலுசு, வாட்ச் உள்ளிட்டவை இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, அம்பத்துார் உதவி கமிஷனர் பிராங்க் டி ரூபனிடம், ஆட்டோவில் கிடந்த 'ஹேண்ட் பேக்'கை பரமசிவம் ஒப்படைத்தார்.
அதேநேரம், அம்பத்துார், சண்முகபுரத்தைச் சேர்ந்த, சரண்யா, 26, என்பவர், தங்க நகை வைத்திருந்த தன் பையை ஆட்டோவில் தவறவிட்டதாக, அம்பத்துார் போலீசில் புகார் அளிக்க வந்தார். விசாரணையில், சரண்யா தவறவிட்ட ஹேண்ட் பேக்கை தான், ஆட்டோ ஓட்டுநர் பரமசிவம் மீட்டுள்ளார் என்பது தெரிந்தது.
இதையடுத்து, செங்குன்றம் சரக துணை கமிஷனர் பாலாஜி முன்னிலையில், நான்கரை சவரன் தங்க நகைகளை சரண்யாவிடம் பரமசிவம் ஒப்படைத்தார்.
நெகிழ்ச்சியடைந்த சரண்யா அவரது காலில் விழுந்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.
துணை கமிஷனர் பாலாஜி, உதவி கமிஷனர் பிராங்க் டி ரூபன் ஆகியோர், பரமசிவத்தை பாராட்டினர்.

