ADDED : மே 19, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம்:கொருக்குப்பேட்டை, கார்நேசன் நகரைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான், 30; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று காசிமேடு கடற்கரை பகுதியில் மது அருந்தி, வீட்டிற்கு நடந்து சென்றார். அங்கு வந்த சில வாலிபர்கள், அப்துல்ரகுமானை வழிமறித்து, பணம், மொபைல் போனை கேட்டு மிரட்டினர்.
அப்துல்ரகுமான் தர மறுக்கவே, அப்துல் ரகுமானின் தலையில் கல்லால் தாக்கி, பணம் மற்றும் மொபைல்போனை பறித்து தப்பினர்.
பலத்த காயமடைந்த அப்துல்ரகுமானுக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளன. இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரிக்கின்றனர்.