/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ ஓட்டுநரின் போன் திருடியோர் கைது
/
ஆட்டோ ஓட்டுநரின் போன் திருடியோர் கைது
ADDED : டிச 09, 2024 03:39 AM

அமைந்தகரை:அமைந்தகரை பி.பி., கார்டன் 6வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 42; ஆட்டோ ஓட்டுநர். இவர், கடந்த மாதம் 6ம் தேதி, எம்.எம்.டி.ஏ., காலனியில் இருந்து இருவரை சவாரி ஏற்றி, அயனாவரம் நோக்கி சென்றார்.
அமைந்தகரை, கன்னியம்மன் கோவில் அருகே உள்ள கடையில், இன்ஜின் ஆயில் மாற்ற ஆட்டோவை நிறுத்தினார். தன் மொபைல் போனை ஆட்டோவின் முன்பக்கம் வைத்து விட்டு, ஆயில் மாற்ற ஆட்டோவின் பின்புறம் சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரவணனின் மொபைல் போனை திருடி சென்றனர். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து, மொபைல் போன் திருடிய, செங்குன்றம், முண்டியம்மன் நகரைச் சேர்ந்த சந்தோஷ், 24, மற்றும் செங்குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், 21, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து மொபைல் போன் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன.