UPDATED : நவ 26, 2026 04:44 PM
ADDED : நவ 26, 2026 04:23 PM

நங்கநல்லுார்: சிற்றுந்து மோதிய விபத்தில், கார் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தள்ளுவண்டி கடை சேதமானது.
மடிப்பாக்கத்தில் இருந்து ஆலந்துார், மெட்ரோ ரயில் நிலையம் செல்லும், தடம் எண்-: 82 சிற்றுந்து, இன்று (நவ.,26) காலை நங்கநல்லுார் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.
சிற்றுந்தை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நெல்சன், 50, என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக பம்மலைச் சேர்ந்த பிரேம்குமார், 57, பணியில் இருந்தார்.
வோல்டாஸ் காலனியில் திருப்பம் ஒன்றில் ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையோரம் நின்றிருந்த அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தள்ளுவண்டிக்கடை மற்றும் கார் மீது மோதியது.
அப்பகுதியில் எவரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தள்ளு வண்டி கடை மற்றும் அதிலிருந்த அழகு சாதன பொருட்கள் சேதமடைந்தன. விபத்து குறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
