ADDED : ஜன 14, 2026 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வடமாநில வாலிபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சைப்கான், 21, சுனில்குமார், 24, அசோக் சவுகான், 31. இவர்கள், நேற்று பெரம்பூர் ரயில் நிலையம் வந்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு செல்வதற்காக, ஆட்டோவில் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி சென்றனர். வழியில், ஆட்டோவில் ஏறிய இருவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சேர்ந்து, வடமாநில வாலிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லை என்றதால், அவர்களை தாக்கி மொபைல் போனை பறித்து, மூவரையும் இறக்கிவிட்டு தப்பினர்.
வியாசர்பாடி போலீசார் விசாரித்து, புளிந்தோப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராம்குமார், 35, என்பவரை கைது செய்தனர். தலைமறைவான ஜனா, விக்கி ஆகியோரை தேடி வருகின்றனர்.

