/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சவாரிக்கு அழைத்து சென்று ஆட்டோ திருடியோர் கைது
/
சவாரிக்கு அழைத்து சென்று ஆட்டோ திருடியோர் கைது
ADDED : மார் 21, 2026 10:22 PM
கொடுங்கையூர்: சவாரிக்கு அழைத்து சென்று, ஆட்டோவை திருடிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் சையது அகமது, 55; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 8ம் தேதி, மாதவரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, இரு வாலிபர்கள் கொடுங்கையூர் செல்ல வேண்டும் எனக்கூறி, ஆட்டோவில் ஏறினார்.
கொடுங்கையூர், குப்பைமேடு எடைமேடை அருகே வந்து இறங்கி, காசு கொடுப்பது போல் பேசி கொண்டே ஒருவர் நடந்து சென்றார். அவரிடம் பணம் வாங்குவதற்கு சையது அகமது, ஆட்டோவில் இருந்து இறங்கிய நேரத்தில், மற்றொரு நபர், ஆட்டோவை திருடி வேகமாக ஓட்டி சென்றார். சையது அகமது சுதாரிப்பதற்குள், அவரிடம் பேசிக்கொண்டிருந்த நபர், சையது அகமதுவின் சட்டை பாக்கெட்டில் இருந்த 1,000 ரூபாயை திருடி தப்பினார்.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். இதில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, பழைய குற்றவாளிகளான திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி கணேஷ், 25, தண்டையார்பேட்டை சந்தோஷ், 18 ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

