ADDED : செப் 28, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், திருவள்ளூர், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன், 54; ஆட்டோ ஓட்டுனர். கடந்த 18ம் தேதி கக்கன்ஜி காலனியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார்.
ஆட்டோவை வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்தார். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில், பெரம்பூர் பி.பி., சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆட்டோவை ஓட்டி வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த நதீம், 23, என்பவரை, போலீசார் மடக்கி விசாரித்தனர்.
அதில், நதீம் ஓட்டி வந்த ஆட்டோ, ரஞ்சனின் திருட்டு போன ஆட்டோ என்பது தெரிந்தது. நதீமை கைது செய்து ஆட்டோவை மீட்டனர்.