UPDATED : ஜூன் 23, 2025 03:30 PM
ADDED : ஜூன் 23, 2025 03:50 AM

அயனாவரம்:வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கர், 56. இவர், அயனாவரம், ராஜூ தெருவில், ஆட்டோ கன்சல்டன்சி சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு விற்பனைக்காக வந்த ஆட்டோவை, கடந்த 19ம் தேதி கடையின் வெளியில் நிறுத்தியுள்ளார்.
மறுநாள் காலை பார்த்தபோது, ஆட்டோவை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அயனாவரம் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, போரூர் அருகில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதித்தனர். விசாரணையில், திருவேற்காடைச் சேர்ந்த மணிகண்டன், 29, என்பதும், அயனாவரத்தில் ஆட்டோவை திருடி சுற்றி வந்ததும் தெரிந்தது. போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து, அயனாவரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின், மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

