sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் அண்ணாநகர், திருமங்கலத்தில் அடாவடி

/

 சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் அண்ணாநகர், திருமங்கலத்தில் அடாவடி

 சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் அண்ணாநகர், திருமங்கலத்தில் அடாவடி

 சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் அண்ணாநகர், திருமங்கலத்தில் அடாவடி

1


ADDED : ஜன 19, 2026 06:22 AM

Google News

ADDED : ஜன 19, 2026 06:22 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்: அண்ணா நகர், திருமங்கலம், வில்லிவாக்கம் பகுதிகளில், சாலையிலேயே அத்துமீறி ஆட்டோக்களை நிறுத்தி பயணியரை ஏற்றுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில், மற்ற இடங்களை விட, அண்ணா நகரை சுற்றியுள்ள பகுதிகளில், 'ஷேர்' ஆட்டோக்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. குறிப்பாக, திருமங்கலம் சிக்னல் பகுதியில் இருந்து, கோயம்பேடு, பாடி, அம்பத்துார், அண்ணா நகர், அரும்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணிப்போர் அதிகம்.

இந்த 'ஷேர்' ஆட்டோ ஓட்டுநர்களின் அடாவடி நடவடிக்கைகளால், அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:

அண்ணா நகர், திருமங்கலம், வில்லிவாக்கம் சந்திப்பில், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சாலைகளை ஆக்கிரமித்து, ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த ஆட்டோக்களின் விதிமீறல்களுக்குப் பஞ்சமில்லை.

குறிப்பாக சிக்னல்கள், பேருந்து நிறுத்தங்களை ஒட்டியே, சாலையோரத்தை ஆக்கிரமித்து, ஆட்டோக்கள் பல மணி நேரம் நிறுத்தப்படுகின்றன. அரசு பேருந்துக்காக நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியருக்கு இடையூறாக வழிமறித்து நிறுத்தி, பயணியரை ஏற்றுவதிலும், ஆட்டோ ஓட்டுநர்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது.

சாலையோரம் செல்வோரை கண்டால், சாலையின் மையத்திலேயே ஆட்டோவை திடீரென நிறுத்தி, மற்ற வாகன ஓட்டிகளை திசை திருப்பி, விபத்து அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.

இதை கண்டிக்கும் வாகன ஓட்டிகளை, ஆட்டோ ஓட்டுநர்கள் மரியாதை குறைவாக பேசி மிரட்டல் விடுக்கின்றனர். விபத்து ஏற்படுத்தும் விதமாக, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us