ADDED : ஜன 10, 2026 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக் நகர்: பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால், இரண்டு ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.
அசோக் நகர், 88வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 45; ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோ, நேற்று அதிகாலை 3:00 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும், அருகில் இருந்த மற்றொரு ஆட்டோவிலும் பரவி தீப்படித்தது.
அசோக் நகர் தீயணைப்பு நிலை வீரர்கள் தீயை அணைத்தனர். விசாரணையில், ஆட்டோவில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இது குறித்து, கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

