ADDED : மார் 25, 2025 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி மாநகராட்சி கூட்டம்
ஆவடி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டரங்கின் வெளியே உள்ள சுவரில், 3 அடி நீளம் உடைய ரம்பத்திலான கத்தி இருந்தது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. விசாரணையில், அது புல் வெட்டும் கத்தி என தெரிந்தது. புல் வெட்டும் ஊழியர் யாரோ அங்கு வைத்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அதை யார் அங்கு வைத்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.