/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் வடிகால் துார் வாரும் பணி ஆவடிக்கு வெள்ள பாதிப்பு அபாயம்
/
கிடப்பில் வடிகால் துார் வாரும் பணி ஆவடிக்கு வெள்ள பாதிப்பு அபாயம்
கிடப்பில் வடிகால் துார் வாரும் பணி ஆவடிக்கு வெள்ள பாதிப்பு அபாயம்
கிடப்பில் வடிகால் துார் வாரும் பணி ஆவடிக்கு வெள்ள பாதிப்பு அபாயம்
ADDED : செப் 24, 2024 12:41 AM

ஆவடி, கடந்தாண்டு பருவ மழையின்போது, ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், அண்ணனுார், பருத்திப்பட்டு உள்ளிட்ட 32 பகுதிகளில் உள்ள 3,227 வீடுகளில், வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது. இதில், அவர்களது இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பாதிக்கப்பட்ட 2,000 பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, மழைக்கால பாதிப்பை தடுக்க வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநில பேரிடர் வெள்ளத்தடுப்பு நிதி வாயிலாக 30.61 கோடி ரூபாய் மதிப்பில், 10 இடங்களில் 9.45 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேநேரம், வார்டுகளில் உள்ள வடிகால்கள் துார் வாரும் பணி, இன்னும் துவக்கப்படவில்லை.
இது குறித்து, ஆவடி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது:
வடிகாலை துார் வார வேண்டும் என, கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 48 வார்டுகளிலும், இதுவரை துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 40 அடி கால்வாயிலும், துார் வாரும் பணிகள் முறையாக நடக்கவில்லை. இதனால், ஆவடி மாநகராட்சி பகுதிகள், இந்த ஆண்டும் வெள்ள பாதிப்பில் சிக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.