ADDED : ஏப் 15, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை,
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் துறை சார்பில், வாகன ஓட்டிகளுக்கு, 'ஹெல்மெட்' குறித்த, 10 நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று துவக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று, பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி கமிஷனர் சுந்தர்ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாண்டியன் முன்னிலையில், 'ஹெல்மெட்' அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் ஓரம் கட்டப்பட்டு, அவர்களுக்கு அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின், இனிப்புகளை வழங்கி, உறுதிமொழி எடுக்க வைத்து அனுப்பி வைத்தனர்.