/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அய்யப்பன்தாங்கல் -- கோயம்பேடு புது தடத்தில் மினி பேருந்து சேவை
/
அய்யப்பன்தாங்கல் -- கோயம்பேடு புது தடத்தில் மினி பேருந்து சேவை
அய்யப்பன்தாங்கல் -- கோயம்பேடு புது தடத்தில் மினி பேருந்து சேவை
அய்யப்பன்தாங்கல் -- கோயம்பேடு புது தடத்தில் மினி பேருந்து சேவை
ADDED : மார் 17, 2024 12:41 AM
வானகரம்:வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னியம்மன் நகர், ஓடமா நகர், ஆண்டாள் நகர், சேக் மானியம் ஆகிய பகுதிகளில் வசிப்போர், கோயம்பேடு, மதுரவாயல், போரூர் செல்ல, போதிய போக்குவரத்து வசதியில்லாமல் அவதிப்பட்டடனர்.
இதனால், பலர் நடந்து செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து, இப்பகுதியில் மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்தது.
இந்த நிலையில், அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து போரூர், சேக் மானியம், ஆண்டாள் நகர், ஓடமாநகர், கன்னியம்மன் நகர் வழியாக, கோயம்பேடு செல்வதற்கு புதிய வழித்தடத்தில் மினி பேருந்து சேவை துவக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டது.
இதையடுத்து, நேற்று மினி பேருந்து சேவை மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி துவக்கி வைத்தார்.