/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அய்யப்பன்தாங்கல் கட்டுடல் வீரர் மிஸ்டராக அசத்தல்
/
அய்யப்பன்தாங்கல் கட்டுடல் வீரர் மிஸ்டராக அசத்தல்
ADDED : ஜன 01, 2024 01:37 AM
சென்னை:தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் ஆதரவுடன், ஒருங்கிணைந்த திருவள்ளூர் தி.மு.க., இளைஞர் அணி சார்பில் 'மிஸ்டர் தமிழ்நாடு' ஆணழகன் போட்டி, திருவள்ளூரில் நடந்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் இருந்து, 214 வீரர்கள் பங்கேற்று, தங்கள் பலத்தை காட்டினர்.
ஜூனியர், மாஸ்டர்ஸ், மென் பிசிக்ஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, வரம்பு சார்ந்து, போட்டிகள் நடத்தப்பட்டன.
மாஸ்டர்ஸ் பிரிவில், சென்னை, அய்யப்பன்தாங்கல் பாண்டியன், அபாரத் திறமை காட்டி, அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, செங்கல்பட்டு மாவட்டம் தட்டிச் சென்றது.