/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி
/
பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ் போட்டி
ADDED : ஜன 20, 2024 01:04 AM
சென்னை, பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டிகள், வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்க உள்ளன.
தமிழக டென்னிஸ் சங்க செயலர் பிரேம்குமார் கர்ரா அளித்த பேட்டி:
அடையாறு காந்திநகர் கிளப்பின் முன்னாள் தலைவரும், 'மாலை முரசு' பத்திரிகையின் முன்னாள் அதிபருமான ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவாக, மூன்றாவது சர்வதேச டென்னிஸ் போட்டிகள், வரும் 22ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை, கிளப் மைதானத்தில் நடக்க உள்ளன. மாலைமுரசு நிர்வாக இயக்குனர் ரா.கண்ணன் ஆதித்தன் ஆதரவு அளித்துள்ளார்.
சசிகுமார் முகுந்த், பிரஜ்வால் தேவ், மணிஷ் சுரேஷ்குமார், கரண்சிங், ஆர்யன் ஷா உள்ளிட்டோருடன், 15 நாடுகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறுவோருக்கு, 21 லட்சம் ரூபாய் பரிசும், தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட உள்ளன.