/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
/
மாணவரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
ADDED : பிப் 20, 2025 01:00 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், ஏகவல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல். இவர் காதலிக்கும் பெண்ணிடம், திருவொற்றியூர், கல்யாணி செட்டி நகரைச் சேர்ந்த தனியார் கல்லுாரி மாணவரான வசந்தகுமார், 20, என்பவர் நட்புடன் பழகி உள்ளார். இது விமலுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில், விமலுக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் மூன்று பேர், 17ம் தேதி இரவு, எண்ணுார் விரைவு சாலை - கிளி ஜோசியம் நகர் பகுதியில் நடந்து சென்ற வசந்தகுமாரிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், வசந்தகுமாரை கீழே தள்ளி, பீர்பாட்டிலால் தலையில் தாக்கி, 'விமலின் காதலியிடம் இனிமேல் பேசக்கூடாது' எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
படுகாயமடைந்த வசந்தகுமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த திருவொற்றியூர் போலீசார், ஏகவல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராகுல், 20, மதியழகன், 24, சந்தோஷ், 19, ஆகிய மூன்று பேரையும், நேற்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர்

