/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம்
/
காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம்
காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம்
காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம்
ADDED : ஜன 30, 2024 12:14 AM

கோயம்பேடு
காய்கறி, பழங்களின் குப்பையால் கோயம்பேடு சந்தையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் இருப்பதாக, அங்குள்ள கூலித் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
பண்டிகை நாட்களில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் வரத்து சற்று அதிகமாய் இருந்தது. இதனால் காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் விற்பனையாகின.
அதன்பின், எப்போதும் போல் வியாபாரம் நடந்தது. இதனால் காய்கறிகள், பழங்களின் விற்பனை மந்த கதியில் இருந்ததால், அவை அழுகிப் போயின.
வேறு வழியின்றி, கோயம்பேடு சந்தை வளாகத்தில் உள்ள ஓரிடத்தில், அழுகிப்போன காய்கறிகள், பழங்களை குப்பையாகக் கொட்டி வைத்துள்ளனர்.
இவை, மேலும் அழுகிய நிலையில் இருப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. அங்கு வரும் பொதுமக்கள், வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்களுக்கு நோய் பரவும் சூழல் நிலவுகிறது.
இப்பகுதியில் தினமும் குவியும் காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளை, உடனடியாக அகற்றுவதில்லை.
குப்பை சேரும்போதே அகற்றினால், துர்நாற்றம் வீசாது. கோயம்பேடு சந்தை வளாகமும் சுகாதாரமாக இருக்கும். எனவே, கோயம்பேடு சந்தையில் கொட்டப்பட்டுள்ள காய்கறிகள், பழங்களின் குப்பையை உடனடியாக அகற்ற, வியாபாரிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.