ADDED : அக் 21, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
சென்னை: கே.எல்.இ., பல்கலை சார்பில், பல்கலைகளுக்கு இடையிலான தேசிய பேட்மின்டன் போட்டி, கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் கடந்த 18ல் தொடங்கி இன்றுடன் முடிகிறது.
இதன் பெண்கள் பிரிவு காலிறுதியில், சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, 2 – 1 என்ற கணக்கில், பெங்களூரின் டாக்டர் மன்மோகன் சிங் பல்கலை அணியை வீழ்த்தியது. அரையிறுதியில் குண்டூரைச் சேர்ந்த கே.எல்.இ.எப்., பல்கலையை, 2 – 0 என்ற கணக்கில் வென்றது.
இறுதி போட்டியில் பெங்களூரின் ஜெயின் பல்கலை அணியை 2 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி எஸ்.ஆர்.எம்., அணி, சாம்பியன் கோப்பையை வென்றது.
இதன் மூலம் தொடர்ந்து எட்டாவது முறையாக, அகில இந்திய பல்கலை பெண்கள் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு, எஸ்.ஆர்.எம்., அணி தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டி அடுத்த ஆண்டு பிப்., 9 முதல் 12 வரை தர்மசாலாவில் நடக்கவுள்ளது.
