/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரதட்சணை புகார் ஆசிரியருக்கு ஜாமின்
/
வரதட்சணை புகார் ஆசிரியருக்கு ஜாமின்
ADDED : பிப் 08, 2024 12:36 AM
அம்பத்துார், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜன், 34; அரசு பள்ளி ஆசிரியர். இவரும், செங்குன்றத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணும், 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த செப்., மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், திருமணத்திற்கு 50 சவரன் நகை, கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கேட்டு, ராஜன் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். அம்பத்துார் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரித்த போலீசார், நான்கு மாதங்களாக திருவள்ளூரில் தலைமறைவாக இருந்த ராஜனை, நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீஸ் தரப்பில் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கப்படாததால், நீதிமன்றம் ராஜனுக்கு ஜாமின் வழங்கியது.
ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக தெரிவித்து உள்ளனர்.

