தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி


ADDED : நவ 23, 2024 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,

தமிழக அரசின், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் 'அட்வான்ஸ்' பேக்கரி பொருள் தயாரிப்பு பயிற்சி, வரும் 26ல் துவங்கி 29ம் தேதி வரை தினமும், காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது.

பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், கரும்புகோவ்னி மில்லட்ஸ் பிரவுனி, ரெட் வெல்வெட் கேக், மில்க் கேக், பீட்சா, பர்கர் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து விளக்கப்படும்.

மேலும், சந்தை படுத்துதல், விலை வழிமுறைகள் குறித்து கற்றுத்தரப்படும். அத்துடன் அரசு உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கப்படும்.

பயிற்சியில் சேர, 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

விபரங்களுக்கு, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் அல்லது 86681 02600, 70101 43022 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us