நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, மெரினா உழைப்பாளர் சிலை அருகே, 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில், தமிழக கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மெரினா உழைப்பாளர் சிலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை வரையிலான வழித்தடங்கள், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளில் ஆளில்லா விமானம், 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.