/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.டி.சி.,யில் இன்று விடுப்பு எடுக்க தடை
/
எம்.டி.சி.,யில் இன்று விடுப்பு எடுக்க தடை
ADDED : பிப் 12, 2026 05:56 AM
சென்னை: அனைத்து தொழிலாளர்களும் இன்று கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என, சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
அகில இந்திய அளவில், இன்று நடக்கும் போராட்டத்தில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், சென்னை மாநகர போக்குரவத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்காமல், தொழிலாளர்கள் வழக்கம் போல பணிக்கு வர வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வாரவிடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். பணிக்கு வராதவர்கள், போராட்டத்தில் பங்கேற்க துாண்டுவோர் மீதும் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

