ADDED : மார் 03, 2024 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி,:ஆவடி அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சின்ன தம்பி மனைவி மீனா, 40. இவர், கடந்த 17ம் தேதி, மதியம், தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மகளுக்கு உணவு வழங்கி விட்டு, வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது, ஹெல்மெட் அணிந்தபடி, பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், அவரது 4 சவரன் செயினை பறித்துச் சென்றார்.
பட்டாபிராம் போலீசாரின் விசாரணையில், மிட்டாய் கார்த்திக், 27, என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. திருவேற்காடு, அன்பு நகரில் பதுங்கி இருந்த கார்த்திக்கை, போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவர் தப்பியோட முயன்றபோது, தடுக்கி விழுந்ததில், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு, சிகிச்சை அளித்தனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

