/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இஷ்டம்போல் ரூ.23 லட்சம் சுருட்டிய வங்கி கிளை மேலாளர், கிளர்க் கைது
/
இஷ்டம்போல் ரூ.23 லட்சம் சுருட்டிய வங்கி கிளை மேலாளர், கிளர்க் கைது
இஷ்டம்போல் ரூ.23 லட்சம் சுருட்டிய வங்கி கிளை மேலாளர், கிளர்க் கைது
இஷ்டம்போல் ரூ.23 லட்சம் சுருட்டிய வங்கி கிளை மேலாளர், கிளர்க் கைது
ADDED : ஏப் 24, 2025 12:34 AM

சென்னை, ல மேலாளராக பணிபுரிந்து வருபவர் சத்யநாராயணா, 52. அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்:
வங்கியின் சாந்தோம் கிளை மேலாளராக சுந்தர் மோகன்மாஜி, 47, கிளர்க்காக மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெய்சிங், 57 என்பவரும் பணியாற்றினர்.
இருவரும் பதவியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், அவர்கள் போல போலியாக கையெழுத்திட்டு பணம் எடுத்துள்ளனர்.
இறந்து போனவர்களின் கணக்கிலிருந்த பணத்தை கையாடல் செய்துள்ளனர். வாடிக்கையாளர்களின் பெயரில் வங்கிக்கடன் பெற்று, மோசடி செய்துள்ளனர்.
கடனை முழுதும் அடைத்தபிறகும், நகையை திரும்பப் பெற வராத வாடிக்கையாளர்களின், 146 கிராம் நகையை கையாடல் செய்துள்ளனர்.
இவ்வாறாக, 23.48 லட்சம் ரூபாய் கையாடல் செய்து, சட்டவிரோதமாக சுயலாம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட, இந்தியன் வங்கி சாந்தோம் கிளை மேலாளர் சுந்தர் மோகன் மாஜி, கிளர்க் ஜெய்சிங் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.