/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து சிறுவன் 'அட்மிட்'
/
மின்சாரம் பாய்ந்து சிறுவன் 'அட்மிட்'
ADDED : ஏப் 17, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், உத்தாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட், 35; தனியார் நிறுவன் ஊழியர். இவரது, 9 வயது மகன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து, மங்கள் நகர் முதல் தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது, சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் கால் வைத்தபோது, மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. சுருண்டு விழுந்த சிறுவன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மின்சாரம் தாக்கியதா என்பது குறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.