தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மதுக்கூடத்தில் தகராறு: இருவர் கைது

 மதுக்கூடத்தில் தகராறு: இருவர் கைது

 மதுக்கூடத்தில் தகராறு: இருவர் கைது


ADDED : ஏப் 08, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலத்தில் உள்ள தனியார் மதுக்கூடத்தில், மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த பரத்சித்தன், 24, என்பவர், கடந்த 5ம் தேதி, மது அருந்தி கொண்டிருந்தார்.

அங்கு, டிவியில் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நான்கு பேர், சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை பரத் சித்தன் கண்டித்ததால், தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த மது பாட்டிலால், பரத்சித்தனை தாக்கி, நால்வரும் தப்பினார்.

திருமங்கலம் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட அம்பத்துாரை சேர்ந்த குப்பன், 36, ரமேஷ், 37, ஆகிய இருவரை கைது செய்தனர்; மற்றவர்களை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us