‘பார் – ஹைப்பர் மார்க்கெட்’ மேடவாக்கத்தில் திறப்பு
‘பார் – ஹைப்பர் மார்க்கெட்’ மேடவாக்கத்தில் திறப்பு
UPDATED : நவ 23, 2026 09:52 PM
ADDED : நவ 23, 2026 09:52 PM
சென்னை: ‘காளீஸ்வரி’ குழுமத்தின் புதிய முயற்சியாக, மேடவாக்கத்தில் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ‘பார் – ஹைப்பர் மார்க்கெட்’ திறக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, காளீஸ்வரி குழுமம் வெளியிட்ட அறிக்கை:
‘கோல்டு வின்னர், ஸ்ரீகோல்டு, தீபம்’ உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய தயாரிப்புகள் வாயிலாக, காளீஸ்வரி நிறுவனம், மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
இக்குழுமத்தின் கீழ் செயல்படும் காளீஸ்வரி ரீடெயில் நிறுவனம், ‘பார் எவர்’ என்ற பெயரில், 25 சூப்பர் மார்க்கெட்களை நடத்துகிறது. இதன் அடுத்தகட்டமாக, ‘பார்’ ஹைப்பர் மார்க்கெட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேடவாக்கம் – சித்தாலப்பாக்கம் சாலையில் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. நவ., 20-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், குழும இயக்குநர் காளீஸ்வரி, இந்த வளாகத்தை திறந்து வைத்தார்.
இதில், 61 ஆயிரம் சதுரடியில் அமைந்துள்ள ஹைப்பர் மார்க்கெட்டில், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் என, வீட்டுக்கு தேவையான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அன்றாட பொருட்கள், சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்படுகின்றன.
‘வசந்த் அண்ட் கோ, டைட்டன், ஜாக்கி, மெட்ராஸ் சாரீஸ்’ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில், ஷாப்பிங், உணவு, பொழுதுபோக்கு என அனைத்தையும் அனுபவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
