/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுக்கூட ஊழியர்கள் கைது 60 பாட்டில்கள் பறிமுதல்
/
மதுக்கூட ஊழியர்கள் கைது 60 பாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஜன 10, 2026 05:20 AM
அனகாபுத்துார்: அனகாபுத்துாரில், தனியாக சிறிய அறை அமைத்து, 24 மணி நேரமும் மது விற்பனை செய்த, மதுக்கூட ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்லாவரம், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனகாபுத்துாரில் உள்ள மதுக்கூடத்தில், அதை ஒட்டி, சிறிய அறை அமைத்து, 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இது தொடர்பாக, பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, சங்கர் நகர் போலீசார், நேற்று அங்கு சென்றனர்.
மதுக்கூடத்தில் பணிபுரிந்து வந்த பம்மலைச் சேர்ந்த ஹரிஹரன், 50, அனகாபுத்துாரைச் சேர்ந்த ரூபன், 40, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், மற்ற மதுக்கூடங்களிலும் சோதனை நடத்தி, 24 மணி நேர சரக்கு விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

