/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் 'மெட்ரோ'வால் போக்குவரத்து மாற்றம்
/
பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் 'மெட்ரோ'வால் போக்குவரத்து மாற்றம்
பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் 'மெட்ரோ'வால் போக்குவரத்து மாற்றம்
பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் 'மெட்ரோ'வால் போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 10, 2024 12:51 AM
சென்னை, பரங்கிமலை - பூந்தமல்லி சாலை - ஆர்மி சாலை சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை, மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால், சோதனை அடிப்படையில், வரும் 11 முதல், 14ம் தேதி வரை, போக்குவரத்து மாற்றம் செயயப்பட்டுகிறது.
அதன் விபரம்:
கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில், எந்த மாற்றமும் இல்லை. அவை, வழக்கம் போல செல்லலாம்.
போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து, பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில், நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாறாக, பரங்கிமலை - பூந்தமல்லி சாலை - பெல் ராணுவ சாலை சந்திப்பில், புதிதாக அமைந்துள்ள சாலை வழியாக, டிபென்ஸ் காலனி, 1வது அவென்யூ வழியாக, இலகுரக வாகனங்கள், செயின்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு செல்லலாம்.
மற்ற வாகனங்கள், கன்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர், 7வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு - சிட்கோ இண்டஸ்ட்ரியல் சாலை சந்திப்பு வழியாக கத்திபாரா அடையாலம். வடபழநி செல்ல இடது புறமாக செல்லலாம்.
இத்தகவலை, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.