தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அகதிகள் முகாமில் சரமாரி தாக்குதல்: ஒருவர் கைது

அகதிகள் முகாமில் சரமாரி தாக்குதல்: ஒருவர் கைது

அகதிகள் முகாமில் சரமாரி தாக்குதல்: ஒருவர் கைது


ADDED : நவ 12, 2024 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் பால்ராஜ், 38. இவருக்கும், அதே முகாமில் வசிக்கும் வெள்ளையன், 35, என்பவருக்கும், முன் விரோதம் இருந்தது.

அதன் காரணமாக, கடந்த 1ம் தேதி இரவு, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பால்ராஜ் மற்றும் அவரது நண்பர் சின்னதம்பி, 35, ஆகியோரை, வெள்ளையன் மற்றும் அவரது நண்பர் சரத், 22, இணைந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இதில், பால்ராஜ், சின்னதம்பி ஆகியோர், பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், வெள்ளையனை நேற்று, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்தனர். சரத்தை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us