/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை ஆக்கிரமிப்பை தடுக்க மேம்பாலத்தில் தடுப்பு அமைப்பு
/
சாலை ஆக்கிரமிப்பை தடுக்க மேம்பாலத்தில் தடுப்பு அமைப்பு
சாலை ஆக்கிரமிப்பை தடுக்க மேம்பாலத்தில் தடுப்பு அமைப்பு
சாலை ஆக்கிரமிப்பை தடுக்க மேம்பாலத்தில் தடுப்பு அமைப்பு
ADDED : அக் 24, 2024 12:23 AM

சென்னை,
எழும்பூர் காந்தி இர்வீன் மேம்பாலத்தில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தாத வகையில், போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து உள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, 33 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவற்றில் சில மேம்பாலங்களில் 'கால்டாக்சி' கார்களும், ஆட்டோக்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக, வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக, எழும்பூர் காந்தி இர்வீன் மேம்பாலத்தில், அதிக அளவில் ஆட்டோக்கள் ஆக்கிரமித்து, வரிசையாக நிறுத்தப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது, எழும்பூர் போக்குவரத்து போலீசார், சாலையை வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தாத வகையில், இரும்பு தடுப்புகளை அமைத்து உள்ளனர். இதனால், சாலை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவது தடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.