ADDED : பிப் 11, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
சென்னை: கல்லுாரி மாணவிய ருக்கான கூடைப்பந்து போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி முதலிடத்தை கைப்பற்றியது.
கோயம்பேடு செயின்ட் தாமஸ் கல்லுாரியில், கல்லுாரி மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
போட்டியில், எத்திராஜ், லயோலா, எம்.ஓ.பி., வைஷ்ணவா உள்ளிட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
அரையிறுதியில், நுங்கம்பாக்கம், எம்.ஓ.பி., கல்லுாரி, 67 - 51 என்ற கணக்கில், லயோலா கல்லுாரியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டி யில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி மற்றும் எத்திராஜ் அணிகள் எதிர்கொண்டன. துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய எம்.ஓ.பி., அணி, 56 - 25 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று, முதலிடத்தை கைப்பற்றியது.
