ADDED : டிச 08, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே, நேற்று அதிகாலை 4:00 மணியளவில், அம்பத்துார் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், அம்பத்துார், எம்.கே.பி., நகரைச் சேர்ந்த தீபக் குமார், 20, சோழபுரத்தைச் சேர்ந்த வினோத் குமார், 19, என்பதும், அம்பத்தூர் ஓ.டி., பேருந்து நிலையம் அருகே உள்ள, பழைய பேங்க் ஆப் பரோடா சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'டாடா ஏஸ்' வாகனத்தின் பேட்டரியை திருடி தப்ப முயன்ற போது சிக்கியதும் தெரிந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.