/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீச் ரயில் நிலையம் மேம்பாடு 3 மாதங்களில் பணி நிறைவு
/
பீச் ரயில் நிலையம் மேம்பாடு 3 மாதங்களில் பணி நிறைவு
பீச் ரயில் நிலையம் மேம்பாடு 3 மாதங்களில் பணி நிறைவு
பீச் ரயில் நிலையம் மேம்பாடு 3 மாதங்களில் பணி நிறைவு
ADDED : ஜன 07, 2025 12:29 AM

சென்னை, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், 14.58 கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகள், அடுத்த மூன்று மாதங்களில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரிக்கு, 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், 'அம்ரித் பாரத்' நிலைய திட்டத்தின் கீழ், இந்த ரயில் நிலையத்தில், 14.58 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இங்குள்ள நடைமேடைகள் சீரமைப்பு, கூரைகள் அமைப்பது, எஸ்கலேட்டர்கள், நடைமேம்பாலம், லிப்ட், 'சிசிடிவி' கேமரா, உணவகங்கள் உள்ளிட்ட பணிகளில், 70 சதவீதம் முடிந்துள்ளன.
எஞ்சியுள்ள பணிகளை முடித்து, அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

