ADDED : ஜன 17, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,அகில இந்திய பல்கலைகழகங்கள் கூட்டமைப்பு, சென்னையில் உள்ள அமெட், எஸ்.ஆர்.எம்., பல்கலைகள் இணைந்து, அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான, தேசிய அளவிலான பீச் விளையாட்டு போட்டிகளை இன்று துவக்குகிறது.
போட்டிகள், கோவளம் கடற்கரையில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத் திடலில் மூன்று நாட்கள் நடக்கின்றன. இதில், நாட்டில் முதல் முறையாக, 'பீச் ரெஸ்லிங்' என்ற மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியும், இரண்டாவது முறையாக பீச் வாலிபாலும் நடக்கிறது.